டேவிஸ் கோப்பை டென்னிஸ்: டோகோவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

3 hours ago 1

புதுடெல்லி,

டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா- டோகோ இடையிலான 2 நாள் ஆட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் நாள் முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து 2-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி- ரித்விக் சவுத்ரி இணை 6-2, 6-1 என்ற நேர் செட்டில் டிங்கோ அகோம்லோ- இசாக் பாடியோ (டோகோ) ஜோடியை வீழ்த்தியது. இதையடுத்து நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் அறிமுக வீரர் கரண் சிங் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் இசாக் பாடியோவை (டோகோ) தோற்கடித்தார்.

முடிவில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் டோகோவை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

Read Entire Article