டெஸ்லா வளர்ந்தால் பில்கேட்ஸ் திவாலாகி விடுவார்: எலான் மஸ்க் கருத்து

4 weeks ago 4

நியூயார்க்: டெஸ்லா நிறுவனம் வளர்ந்தால் பில்கேட்ஸ் திவாலாகி விடுவார் என்று எலான் மஸ்க் கருத்துதெரிவித்து உள்ளார். உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்கிற்கும், பிரபல தொழில் அதிபர் பில்கேட்சுக்கும் இடையே தொழில் போட்டி உள்ளது. எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக பில்கேட்ஸ் முதலீடு செய்துள்ளார். இந்தநிலையில் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,’ டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் அதிக முதலீடு செய்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடு மோசமாக இருந்தபோது இந்த நிறுவனம் தேறாது என்பதன் அடிப்படையில் டெஸ்லாவுக்கு எதிராக அத்தகைய பெரிய முதலீட்டை அவர் செய்தார். டெஸ்லா திவாலானால் பில்கேட்சுக்கு அதிக லாபம் கிடைக்கும். ஆனால் உலகின் முன்னணி நிறுவனமாக டெஸ்லா உருவெடுக்கும்பட்சத்தில் அது அவரை திவாலாக்ககூடும்’ என்று தெரிவித்துள்ளார்.

The post டெஸ்லா வளர்ந்தால் பில்கேட்ஸ் திவாலாகி விடுவார்: எலான் மஸ்க் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article