டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: 6வது இடத்திற்கு முன்னேறிய டிம் சவுதி

3 weeks ago 7

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. நேற்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2வது இன்னிங்சில் 49 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த நிலையில், இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் டிம் சவுதி 4 சிக்சர்கள் பறக்க விட்டு 65 ரன்கள் எடுத்தார் . இதனால் டெஸ்ட் போட்டியில் டிம் சவுதியின் சிக்சர் எண்ணிக்கை 93ஆக (103 டெஸ்ட்) உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த இந்தியாவின் ஷேவாக்கை (91 சிக்சர், 104 டெஸ்ட்) பின்னுக்கு தள்ளினார்.

அதிக சிக்சர்கள் அடுத்தவர்களின் பட்டியல்:

*பென் ஸ்டோக்ஸ் - 131 சிக்சர் ( முதல் இடம்)

*பிரண்டன் மெக்கல்லம் - 107 சிக்சர் (2வது இடம்)

*ஆடம் கில்கிறிஸ்ட் - 100 (3வது இடம்)

*கிறிஸ் கெய்ல் - 98 (4வது இடம்)

*ஜாக் காலிஸ் - 97 (5வது இடம்).

Read Entire Article