டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2-வது ஆஸ்திரேலிய வீரராக மாபெரும் சாதனை படைத்த கான்ஸ்டாஸ்

6 months ago 19

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இந்த இன்னிங்சில் ஆஸ்திரேலியா தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன உஸ்மான் கவாஜா, அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லபுஸ்சேன் மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக 19 வயதே ஆன அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கான்ஸ்டாஸ், நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பும்ராவின் பந்துவீச்சை எளிதாக அடித்தார். அவரது பந்துவீச்சில் 2 சிக்சர்கள் விளாசிய அவர் 60 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற மாபெரும் சாதனையை கான்ஸ்டாஸ் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. இயன் கிரெய்க் - 17 வயது 240 நாட்கள்

2. சாம் கான்ஸ்டாஸ் - 19 வயது 85 நாட்கள்

3. நீல் ஹார்வி - 19 வயது 121 நாட்கள்

4. ஆர்ச்சி ஜாக்சன் - 19 வயது 150 நாட்கள்

Read Entire Article