டெஸ்ட் கிரிக்கெட்: பர்மிங்காம் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா.. இன்னும் வெற்றி பெறாத இடங்கள் எவை..?

5 hours ago 1

சென்னை,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இது பர்மிங்காம் மைதானத்தில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் இங்கு விளையாடிய 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டிருந்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த 58 ஆண்டு கால சோகத்திற்கு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்து அசத்தியது. அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது.

இருப்பினும் குறைந்தது 5 டெஸ்ட் விளையாடிய மைதானங்களில் இந்தியா இன்னும் 4 இடங்களில் வெற்றி பெறாமல் இருக்கிறது.

அவை விவரம் பின்வருமாறு:-

1. பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் (வெஸ்ட் இண்டீஸ்)

2. மான்செஸ்டர் (இங்கிலாந்து)

3. கராச்சி தேசிய ஸ்டேடியம் (பாகிஸ்தான் )

4. லாகூர் கடாபி ஸ்டேடியம் (பாகிஸ்தான் ).

இதில் இந்திய அணி பாகிஸ்தான் மைதானங்களில் சென்று வெற்றி பெறுவது இனி கடினம்தான். ஏனெனில் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி தொடர்களில் விளையாடுவதை தவிர்த்து வருகின்றன. ஐ.சி.சி. தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. 

Read Entire Article