டெஸ்ட் அணியில் தேர்வானது குறித்து மனம் திறந்த தமிழக வீரர் சாய் சுதர்சன்

4 hours ago 1

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மும்பையில் நேற்று அறிவிக்கப்பட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.

இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் கலக்கி வரும் தமிழகத்தை சேர்ந்த இடக்கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் டெஸ்ட் அணிக்கு முதல்முறையாக அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக தேர்வானது குறித்து குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தமிழக வீரர் சாய் சுதர்சன்  மனம் திறந்து சில கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "உண்மையிலேயே இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது. ஏனெனில் எந்த ஒரு இளம் கிரிக்கெட் வீரருக்குமே தங்களது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது பலரது ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில் எனக்கு இந்திய அணிக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்ததில் உண்மையிலேயே மிகப்பெரிய மகிழ்ச்சி.

இந்திய அணிக்காக விளையாட இவ்வளவு பெரிய கவுரவம் கிடைக்கும் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் எந்த இடத்தில் என்னை ஆட வைத்தாலும் அதில் மகிழ்ச்சிதான். இந்திய அணியின் நிர்வாகம் என்னை எந்த ஆர்டரில் களமிறக்க நினைக்கிறதோ, பயிற்சியாளர்கள் என்னை எந்த இடத்தில் விளையாட சொல்கிறார்களோ அந்த இடத்தில் விளையாட நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.


Read Entire Article