டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள்

13 hours ago 2

புதுடெல்லி,

காஷ்மீர்மாநிலம் பகல்காம் தாக்குதலுக்கு முன்பு தலைநகர் டெல்லியை தகர்க்க பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. சதித் திட்டம் தீட்டியது தெரிய வந்தது. டெல்லியில் சமீபத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் அன்சாரி என்பவர் ஆவார்.இவர் நேபாளம் வழியாக டெல்லிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வந்திருந்தார். அதுபோல கடந்த மார்ச் மாதம் ராஞ்சியில் இருந்து அசம் என்பவர் டெல்லிக்கு வந்திருந்தார்.

இவர்கள் இருவரும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின சிலிப்பர் செல்களாக இயங்கியவர்கள். பாதுகாப்பு படையினருககு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தீவிர விசாரணையில் அவர்கள் இருவரும் டெல்லியில் தொடர் குண்டுவெடிப்பு களை நடத்தி நாச வேலைக்கு திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. தற்போது அவர்கள் இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட் டுள்ளனர்.

Read Entire Article