புதுடெல்லி: டெல்லியை ஆள்வது முதல்வரின் கணவரா? என்று எதிர்கட்சி தலைவர் அடிசி கிண்டலாக ேகள்வி எழுப்பி உள்ளார். பாஜக மூத்த தலைவரான ரேகா குப்தா, ெடல்லியின் முதல்வராக இருக்கிறார். ஆனால் அவரது கணவர் குறித்து எதிர்க்கட்சித் தலைவரான ஆம்ஆத்மி மூத்த தலைவர் அடிசி வெளியிட்ட பதிவில், ‘முதல்வர் ரேகா குப்தாவின் கணவர் மனீஷ் குப்தா, டெல்லி மாநகராட்சி, டெல்லி ஜல் போர்டு, பொதுப்பணித் துறை, டெல்லி நகர்ப்புற குடிசை மாற்று வாரியம் போன்ற துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
முதல்வரின் கணவர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் டெல்லியில் ஆட்சி நடத்துகிறார். ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் பஞ்சாயத்து தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருடைய கணவர்தான் எல்லா வேலைகளையும் செய்வார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பெண்களுக்கு எப்படி ஆட்சி செய்வது என்று தெரியாத நிலையில்தான் இப்படிச் செய்கிறார்கள். ஆனால் இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாக பெண் முதல்வரின் கணவர் ஆட்சி நடத்துவதும் இதுவே முதல் சம்பவமாகும்.
டெல்லியில் அதிகரித்து வரும் மின்வெட்டு மற்றும் தனியார் பள்ளிக் கட்டண உயர்வு குறித்து முதல்வர் பேசுவதில்லை. இந்தப் பிரச்னைகளில் முதல்வரின் ஒன்றும் தெரியாதா? அல்லது ரேகா குப்தாவுக்கு எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்று தெரியவில்லையா? தினமும் மின்வெட்டு ஏற்படுவதற்குக் காரணம் என்ன?’ என்று கூறியுள்ளார்.
அடிசியின் குற்றச்சாட்டுகளுக்கு டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா அளித்த பதிலில், ‘ரேகா குப்தாவின் கணவர் அவருக்கு உதவுவது சட்டவிரோதமோ அநீதியோ அல்ல; ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில் முன்பு நடந்த விஷயங்கள் தெரியாதா? டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் அலுவலகத்தில் இருந்து மக்களைச் சந்தித்துப் பேசினார். அது ஜனநாயகத்திற்கு அவமானமாக இல்லையா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
The post டெல்லியை ஆள்வது முதல்வரின் கணவரா..? எதிர்கட்சி தலைவர் கிண்டல் appeared first on Dinakaran.