டெல்லியில் ரூ.27.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - அமித்ஷா

3 days ago 3

புது டெல்லி,

போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் டெல்லி காவல்துறையின் கூட்டுக் குழு ரூ.27.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கைப்பற்றி 5 பேரைக் கைது செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

மேலும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் இடைவிடாத வேட்டை தொடரும் என்றும் கூறினார். இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

"மோடி அரசாங்கத்தின் போதைப்பொருள் சகிப்புத்தன்மைக்கு இணங்க, டெல்லி-என்.சி.ஆரில் ஒரு பெரிய போதைப்பொருள் வலையமைப்பு முறியடிக்கப்பட்டது. போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் டெல்லி காவல்துறையினர் அந்தக் கும்பலைப் பிடித்து ரூ.27.4 கோடி மதிப்புள்ள மெத்தம்பேட்டமைன், எம்.டி.எம்.ஏ மற்றும் கோக்கைன் ஆகியவற்றை மீட்டு 5 பேரைக் கைது செய்தனர்," இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இந்த பெரிய முன்னேற்றத்திற்காக போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் டெல்லி காவல்துறையினரையும் உள்துறை அமைச்சர் பாராட்டினார்.

Read Entire Article