
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் போதைப்பொருட்கள் கடத்தல் முயற்சி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தெற்கு டெல்லி பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சர்வதேச போதைப்பொருள் கும்பலிடமிருந்து ரூ.2,000 கோடி மதிப்பிலான 565 கிலோ கொக்கைன் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.