டெல்லியில் முடங்கிய திட்டப்பணிகள்; மந்திரிகளுடன் முதல்-மந்திரி அதிஷி ஆலோசனைக் கூட்டம்

3 months ago 28

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. முதல்-மந்திரி அலுவலகம் செல்லக் கூடாது. முதல்-மந்திரியாக கோப்புகளை கையாளக் கூடாது என நிபந்தனை விதித்தது.

சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்-மந்திரி நாற்காலியில் அமரமாட்டேன் என்று கூறி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக மூத்த மந்திரி அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிலையில், டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி பதவியேற்றுக் கொண்டார். அதிஷியுடன் 5 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவியேற்றனர்.

இதனிடையே, டெல்லியில் முடங்கிய திட்டப்பணிகள் குறித்து முதல்-மந்திரி அதிஷிக்கு, முன்னாள் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் டெல்லி தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி அதிஷி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை மந்திரிகளுடன் பல்வேறு திட்டப்பணிகள் தொடர்பாக அதிஷி ஆலோசனை நடத்தினார். 

Read Entire Article