டெல்லியில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்: விருதுநகர் நிர்வாகிகள் பங்கேற்பு

3 hours ago 2

 

ராஜபாளையம், பிப்.8: டெல்லியில் புதிய யுஜிசி வரைவு விதிகளை திரும்ப பெறக்கோரி, திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ், மதிமுக பொதுச் செயலாளர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையை ஏற்று, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற மாணவரணி ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் செயலாளரும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் ஏற்பாட்டில் மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில், விருதுநகர் தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன், துணை அமைப்பாளர்கள் மல்லி ராஜ்குமார், துரை கற்பகராஜ், பொன் பாண்டி, துரைமுருகன் மற்றும் வழக்கறிஞரின் மாவட்டத் துணை அமைப்பாளர் முனீஸ்வரன் கலந்து கொண்டனர்.

The post டெல்லியில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்: விருதுநகர் நிர்வாகிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article