டெல்லியில் கைது செய்யப்பட்ட 2 ஐஎஸ் பயங்கரவாதிகள் திகார் சிறையில் அடைப்பு

4 hours ago 1


புதுடெல்லி: டெல்லியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை டெல்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் மிகப்பெரிய நாச வேலைக்கு திட்டம் தீட்டி வந்ததும், அவர்களது சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நேபாள வம்சாவளியை சேர்ந்த அன்சாருல் மியான் அன்சாரி. இவர்களிடம் இருந்து பல ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து டெல்லி போலீசார் மே மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 இரண்டு பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

The post டெல்லியில் கைது செய்யப்பட்ட 2 ஐஎஸ் பயங்கரவாதிகள் திகார் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article