டெல்லியில் காங். ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு காஸ் சிலிண்டர்

3 hours ago 2

புதுடெல்லி: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஏஐசிசி டெல்லி பொறுப்பாளர் காசி நிஜாமுதீன் மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ‘‘டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் தனது ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றும். நகரத்தில் வசிப்பவர்களுக்கு ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், இலவச ரேசன் பொருட்கள், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்” என்றனர். ஏற்கனவே பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. மேலும் ரூ-25லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லியில் காங். ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு காஸ் சிலிண்டர் appeared first on Dinakaran.

Read Entire Article