
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாசில் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை முதலில் பந்துவீச உள்ளது.
முன்னதாக கடந்த ஆட்டத்தின்போது முழங்கையில் காயம் அடைந்த சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவியது. அவர் ஆடாத பட்சத்தில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனி கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தகவல் வெளியாகியது.
இந்நிலையில் முழங்கை காயத்திலிருந்த மீண்ட சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.
இந்த போட்டிக்கான சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓவர்டானுக்கு பதிலாக கான்வேவும், திரிபாதிக்கு பதிலாக முகேஷ் சவுத்ரியும் களமிறங்க உள்ளனர். டெல்லி அணியில் பாப் டு பிளெஸ்சிசுக்கு பதிலாக சமீர் ரிஸ்வியும் இடம்பெற்றுள்ளனர்.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
சென்னை: ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பதிரனா
டெல்லி: ஜேக் பிரேசர்-மெக்குர்க், கேஎல் ராகுல், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா