
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் நடத்திய சோதனையின்போது, பாங்காக்கிலிருந்து வந்த நொய்டாவை சேர்ந்த 20 வயது பெண் ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது டிராலியில் இருந்து அரிசு மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைத்திருந்த 11,284 கிராம் போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடத்தப்பட்ட போதைப்பொருளின் சர்வதே சந்தை மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடந்த 21ம் தேதி நடந்ததாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.