டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசல் சம்பவம்: பிரதமர் மோடி இரங்கல்

3 months ago 13

புதுடெல்லி,

கும்பமேளா செல்வதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் இரவு 9:15 மணிக்கு அதிக அளவில் பயணிகள் திரண்டனர். இதையடுத்து 13 மற்றும் 114 பிளாட்பார்ம்களில் கூட்ட நெரிசல் அதிகமானது. அப்போது ரயிலில் ஏற பயணிகள் முண்டியடித்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 3 குழந்தைகள் உட்பட 15 பேர் பலியானார்கள். 10 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட துயர சம்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உறவினர்களை இழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதேநரம், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.

உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். அதேபோல, டெல்லி துணை நிலை ஆளுநரிடமும் பேசியிருக்கிறேன். சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய அறிவுறுத்தியுள்ளேன்"என்றார்.

Read Entire Article