புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்த நிலையில், அரசு பங்களாவில் இருந்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து டெல்லி முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற அதிஷி, அரசு பங்களாவில் குடியேற இருந்தநிலையில் திடீரென அவரது வீட்டிற்கு இன்று பொதுப்பணித்துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. உத்தரவின் பேரில் அதிஷியின் உடமைகள் அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாகவும், மாநில கவர்னர் விகே.சக்சேனா, அந்த இல்லத்தை பாஜக தலைவருக்கு ஒதுக்க விரும்புவதாகவும் டெல்லி முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் துணை நிலை கவர்னரின் உத்தரவின்பேரில் தனது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கவர்னர் அலுவலகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்பட்டவில்லை.