டெல்லி: தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயம்

3 weeks ago 5

புதுடெல்லி,

தென்மேற்கு டெல்லியின் நஜாப்கரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் வெகு நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காலை 8.16 மணிக்கு தீ விபத்து தொடர்பான அழைப்பு வந்தது. இதனை தொடர்ந்து 17 தீயணைப்பு வாகனங்களில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொழிற்சாலையின் தரை தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்றார்.

Read Entire Article