டெல்லி தேர்தல்: பெண்களுக்கு மாதம் தலா ரூ. 2,500 உதவித்தொகை - பாஜக வாக்குறுதி

6 hours ago 2

டெல்லி,

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக அதிஷி செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பாஜக முதற்கட்ட தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. டெல்லியில் ஆட்சியமைத்தால் பல்வேறு திட்டங்களை அமல்படுத்த உள்ளதாக பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அக்கட்சியின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

பாஜக முதற்கட்ட தேர்தல் அறிக்கை விவரம்:-

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைமுறைபடுத்தியுள்ள நலத்திட்டங்களில் எழுந்துள்ள ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்கப்படும்.

பாஜக ஆட்சி அமைந்த உடன் டெல்லியில் ஆயூஷ்மான் பாரத் திட்டம் அமல்படுத்தப்பட்டு சுகாதார காப்பீட்டு திட்டத்தொகை ரூ. 5 லட்சம் வரை உயர்த்தப்படும்.

மகிலா சம்ருதி யோஜனா திட்டத்தின்கீழ் பெண்களுக்கு தலா ரூ. 2,500 மாத உதவித்தொகை வழங்கப்படும்.

ஏழைகளுக்கு கியாஸ் சிலிண்டர் தலா ரூ. 500க்கு வழங்கப்படும். ஹோலி, தீபாவளி பணிகையின்போது ஏழைகளுக்கு கியாஸ் சிலிண்டர் ஒன்று இலவசமாக வழங்கப்படும்.

கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ. 21 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு ஊச்சட்டத்து நிறைந்த பொருட்கள் அடங்கிய தொகுப்பு 6 முறை வழங்கப்படும்.

60 முதல் 70 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு தலா ரூ. 2,500 ஓய்வூதியம் வழங்கப்படும். 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article