டெல்லி செல்லும் விவசாயிகள் பேரணியை போலீஸ் தடுப்பதால் புதிய அறிவிப்பு: டிச.18ல் பஞ்சாபில் எல்லா ரயில்களும் தடுக்கப்படும்

4 weeks ago 4

பஞ்சாப்: ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியை நோக்கி வடமாநில விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியை நடத்தபோவதாக அறிவித்து இருப்பது மீண்டும் 2021ம் ஆண்டு ஏற்பட்ட பதட்டத்தை நினைவுப் படுத்துகிறது. வேளாண் விலை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேச விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்பு எல்லையில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் முகாமிட்டுள்ள பஞ்சாப் விவசாயிகளில் 101பேர் டிச.6ம் தேதி டெல்லியை நோக்கி கால்நடையாக பேரணியை தொடங்கினர்.

ஆனால், மூன்று முறை தங்கள் தடுக்கப்பட்டதால் இன்று டிராக்டர் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்தனர். இந்த பேரணியில் பஞ்சாபை தவிர்த்து பிற மாநிலங்கள் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். மறுபுறத்தில் பஞ்சாபில் நாளை மறுநாள் மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளது. மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பஞ்சாபில் அனைத்து ரயில்களும் தடுத்து நிறுத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். ரயில் மறியல் போராட்டத்தில் 13,000 கிராமங்கள் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நவம்பர் 26ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 70வயதான ஜக்ஜித் சிங் தலேவா என்ற விவசாய சங்கத் தலைவர் தனது போராட்டத்தை கைவிட மறுத்து விட்டார். இதனால் ஒன்றிய அரசுக்கு எதிரான விவசாயிகளின் மனநிலை இறுகி வருகிறது. தங்கள் கோரிக்கைகள் குறித்து உடனே பேச்சுவார்த்தை தொடங்குமாறு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2021ம் ஆண்டு பலநூறு டிராக்டர்களில் சென்ற விவசாயிங்கள் டெல்லி செங்கோட்டைக்குள் புகுந்த சம்பவம் நினைவு கூறத்தக்கது.

The post டெல்லி செல்லும் விவசாயிகள் பேரணியை போலீஸ் தடுப்பதால் புதிய அறிவிப்பு: டிச.18ல் பஞ்சாபில் எல்லா ரயில்களும் தடுக்கப்படும் appeared first on Dinakaran.

Read Entire Article