டெல்லி சென்ற இந்திய அணி... ஆட்டம் போட்ட சூர்யகுமார் யாதவ் - வைரல் வீடியோ

3 months ago 22

புதுடெல்லி,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்திலும், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை ( 9-ந் தேதி) நடக்கிறது.

இதற்காக இந்திய அணி டெல்லி சென்றது. அங்கு அவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு நடைப்பெற்றது. இதை பார்த்த சூர்யகுமார் குத்தாட்டம் போட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Gwalior ✈️ Delhi#TeamIndia have arrived for the 2nd #INDvBAN T20I @IDFCFIRSTBank pic.twitter.com/jBWuxzD0Qe

— BCCI (@BCCI) October 8, 2024

Read Entire Article