டெல்லி சட்டசபை தேர்தல்: மணீஷ் சிசோடியா பின்னடைவு

2 hours ago 2

புதுடெல்லி,

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜங்புரா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக அம்மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா போட்டியிட்டார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஜங்புரா தொகுதியில் மணீஷ் சிசோடியா 30,029 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் தார்வீந்தர் சிங் மார்வா 30,665 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 636 ஆகும்.

Read Entire Article