டெல்லி அணிக்கு எதிரான தோல்வி: லக்னோ கேப்டன் கூறியது என்ன ?

4 hours ago 2

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்தது. மார்க்ரம் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி களமிறங்கியது .

தொடக்க முதல் டெல்லி அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர் . அந்த அணியில் அபிஷேக் போரேல். கேஎல் ராகுல் இருவரும் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர் . சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமடித்து அசத்தினர் .இறுதியில் 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு டெல்லி 161 ரன்கள் எடுத்தது . இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தோல்வி தொடர்பாக பேசிய லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது,

 20 ரன்கள் குறைவாக எடுத்தோம் . லக்னோவில், டாஸ் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருந்தது. யார் முதலில் பந்து வீசினாலும், அவர்களுக்கு விக்கெட்டிலிருந்து நிறைய உதவி கிடைக்கிறது. லக்னோவில் இது எப்போதும் நடக்கும், இரண்டாவது இன்னிங்ஸில், விக்கெட் பேட்டிங் செய்ய நன்றாக இருக்கும் .

நான் இதுவரை எதையும் பற்றி யோசிக்கவில்லை, நாங்கள் மீண்டும் கவனம் செலுத்தப் போகிறோம். புதிய தொடக்கத்திலிருந்து அடுத்த போட்டியை விளையாடப் போகிறோம்.என தெரிவித்தார் . 

Read Entire Article