டெல்டாவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி: பிரேமலதா வலியுறுத்தல்

3 months ago 9

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்டா பகுதி முழுவதும் நீரில் மூழ்கி விவசாய பெருமக்களுக்கு கடும் இன்னலை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க ஆவண செய்ய வேண்டும். மேலும், தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை. டெல்டா பகுதி விவசாயத்தை நம்பி இருப்பதால், விவசாய மக்களுக்கு உடனடியாக ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கு பயிர் இழப்பீட்டுக்கான தொகையை வழங்கி, இன்னலிலிருந்து காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post டெல்டாவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி: பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article