டூவீலர் திருடியவர் கைது

1 week ago 3

திருச்செங்கோடு, பிப்.1: திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடப்பட்டு வந்தது. இதையடுத்து திருட்டில் ஈடுபட்டவரை கண்டு பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். அவர்கள் சேலம் சாலை, ஈரோடு சாலை ஆகியவற்றில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் சாலையில் டூவீலரில் வந்த ஒருவர், போலீசாரை கண்டதும் வண்டியை திருப்பி கொண்டு ஓட முயற்சித்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர் டூவீலர் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தேவனாங்குறிச்சி கந்தசாமி நகரை சேர்ந்த ரமேஷ் (35) என்பவரை திருச்செங்கோடு நகர போலீசார் கைது செய்து, திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையிலடைத்தனர்.

 

The post டூவீலர் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article