டிரோன் மூலம் தாக்குவோம்: டிரம்புக்கு ஈரான் அதிகாரி கொலை மிரட்டல்

9 hours ago 3

டெஹ்ரான்,

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த மாதம் தாக்குதல் நடத்தின. இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது. அதே நேரத்தில் ஈரான் மீது அமெரிக்காவும் வான்வெளி தாக்குதல் நடத்தியது. தற்போதைய நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையிலான தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளன. இருப்பினும் அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலிகாமெனியின் நெருங்கிய ஆலோசகரும், முக்கிய அரசியல் பிரமுகருமான ஜவாத் லாரிஜானி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புளோரிடாவில் உள்ள டிரம்பின் சொகுசு பங்களாவான மார்-ஏ-லாகோவில் அவர் சூரிய குளியிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது ஒரு சிறிய டிரோன் மூலம் தாக்கப்படலாம். இது மிகவும் எளிமையானது என்றார். இந்த நிலையில், ஈரான் மிரட்டல் குறித்து அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறும்போது, உண்மையில் அது ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம். நான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் செய்தேன். ஆனால் எனக்கு அதன் மீது ஆர்வமில்லை என்றார்.

Read Entire Article