அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் ரயில்வே-தமிழ்நாடு அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டம் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ரயில்வே 229ரன் எடுத்தது. அதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய தமிழ்நாடு, 438 ரன்களை குவித்தது. முகமது அலி 91ரன்னில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை பறிகொடுத்தார்.
ரயில்வே தரப்பில் குணால் யாதவ் 5, சிவம் சவுத்ரி 3 விக்கெட் அள்ளினர். 3வது நாளான நேற்று 2வது இன்னிங்சை ஆடிய ரயில்வே அணி, ஆட்ட இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 169 எடுத்திருந்தது. 40 ரன்கள் பின்தங்கியுள்ள ரயில்வே அணி, இன்று, கடைசி மற்றும் 4ம் நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post டிரா ஆகுமா தமிழ்நாடு-ரயில்வே போட்டி? appeared first on Dinakaran.