டிரம்ப் பதவியேற்பு விழா: இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு

2 hours ago 3

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், வரும் 20ம் தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். பதவிக்காலம் முடிவடையும் ஜனாதிபதி ஜோ பைடன், விழாவில் கலந்து கொண்டு அதிகாரத்தை அவரிடம் ஒப்படைப்பார். பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு டிரம்ப் உரையாற்றுவார். இவ்விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து டிரம்ப் - வான்ஸ் பதவியேற்பு குழுவின் அழைப்பின் பேரில், இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பார் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பதவியேற்பு விழா முடிந்ததும், புது நிர்வாகத்தினரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article