விபத்துகளை குறைக்க உத்தர பிரதேச அரசு புதிய திட்டம்

2 hours ago 3

 லக்னோ,

விபத்துகள் மற்றும் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில் உத்தர பிரதேச அரசு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன்படி இனி ,பைக்கில் வருபவர்கள் ஹெல்மட் அணியாமல் வந்தால் பெட்ரோல் போடக்கூடாது என்று மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில போக்குவரத்து துறை ஆணையர் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையில், " இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் வண்டிகளுக்கு பெட்ரோல் போடக்கூடாது. பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் ஹெல்மட் அணியாவிட்டாலும் பெட்ரோல் வழங்க ஊழியர்கள் மறுக்க வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஆண்டுக்கு 25 ஆயிரம் முதல் 26 ஆயிரம் பேர் சாலை விபத்தில் பலியாவதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article