டிரம்ப் நிர்வாகத்துடன் இணக்கமாக பணியாற்ற இந்தியா விருப்பம்

2 months ago 10

நியூயார்க்: டிரம்ப் நிர்வாகத்துடன் இணக்கமாக பணியாற்ற இந்தியா விரும்புகிறது என ஐநாவுக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி பெற்றதையடுத்து அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொதுவிவகாரங்கள் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ் “உலகளாவிய சவால்களுக்கு இந்தியா வழியில் பதிலளிப்பது” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அப்போது, “டிரம்பின் முதல் பதவி காலத்தில் அமெரிக்காவுடன் இந்தியா ஒத்துழைப்பையும், நெருக்கமான உறவையும் கொண்டிருந்தது. இரண்டாம் முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க மக்களின் விருப்பங்களை இந்தியா மதிக்கிறது. நாங்கள் அனைத்து அரசாங்கங்களுடனும் இணைந்து பணியாற்றுவோம். இந்தியா – அமெரிக்கா உறவு ஒருமித்த கருத்தை கொண்டுள்ளது. இருநாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு ஆகிவற்றை மேலும் வலப்படுத்த இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவோம்” என்றார்.

The post டிரம்ப் நிர்வாகத்துடன் இணக்கமாக பணியாற்ற இந்தியா விருப்பம் appeared first on Dinakaran.

Read Entire Article