வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றதும் நாட்டின் செயல்திறன் துறையின் தலைவராக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்துள்ளார். கடந்த மாதம் டிரம்ப் பதவியேற்ற உடன் பிறப்பால் குடியுரிமை வழங்க தடை, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தல், திருநங்கைகளுக்குஅளிக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து உட்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்தார். டிரம்பின் அறிவிப்புகள் பல நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது. இந்தநிலையில் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.
குடியேற்ற ஒடுக்குமுறை முதல் திருநங்கைகளின் சலுகை ரத்து செய்யப்பட்டது.பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து அகதிகளை வெளியேற்றுவது உள்ளிட்ட டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிபர் டிரம்ப், சர்வதேச பணக்காரர் எலான் மஸ்க் மற்றும் அரசு மற்றும் சமூகத்திற்காக கொண்டுவரப்பட உள்ள வலது சாரிகளின் திட்டமான செயல் திட்டம் 2025 ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை எதிர்த்து கலிபோர்னியாவில் உள்ள பிலடெல்பியா,மின்னசோட்டா, மிச்சிகன், டெக்சாஸ், விஸ்கான்சின், இண்டியானா, அயோவா உள்ளிட்ட பல இடங்களில் பலர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
* பெண்கள் விளையாட்டு போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்க தடை
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் திருநங்கை விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கு தடை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
The post டிரம்ப் கொள்கைகள், எலான் மஸ்க்குக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டம் appeared first on Dinakaran.