எருசலேம்: ஈரானுக்கு பதிலடி தருவது பிற அரபு நாடுகளுடன் உறவுகளை வலுவாக்குவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். டிரப்பை வெள்ளை மாளிகையில் செவ்வாய் கிழமை நெதன்யாகு சந்தித்து பேச உள்ளார். டிரம்ப் இரண்டாம் முறையாக அதிபரான பின்பு அவர் சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் நெதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்கா புறப்படும் முன்பு டெல் அவிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நெதன்யாகு, ஹமாஸுக்கு எதிரான வெற்றி ஈரானுக்கான பதிலடி. பிற அரபு நாடுகளுடன் நட்புறவு குறித்து டிரம்ப் உடன் பேச உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒன்றரை ஆண்டாக ஹமாஸ் உடன் இஸ்ரேல் போர் புரிந்து வந்த நிலையில், டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அது முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பும் பிணை கைதிகளை பரிமாறி கொள்ள தொடங்கியுள்ளனர். இந்நிலையில், மத்திய கிழக்கு பகுதியின் போக்கை முடிவ செய்ய கூடிய நெதன்யாகுவின் பயணம் சர்வதேச அரசியலிலும் உற்று கவனிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.
The post டிரம்பை சந்திக்க அமெரிக்கா புறப்பட்டார் இஸ்ரேல் பிரதமர்: ஈரான், ஹமாஸ், அரபு நாட்டு உறவுகள் குறித்து பேச திட்டம்!! appeared first on Dinakaran.