டியூசன் வகுப்புக்கு சென்ற 11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

7 hours ago 2

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநறையூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 56). இவர் திருவாரூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளி முடித்து மாலை நேரங்களில் ஏழை மாணவர்களுக்கு திருநறையூரில் டியூஷன் வகுப்பு எடுத்து வந்துள்ளார்.

இவரது டியூசன் வகுப்பில் அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி படித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவிக்கு ஆசிரியர் ரமேஷ் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் இது பற்றி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ரமேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article