லேண்ட் ரோவர் நிறுவனம், டிபண்டர் ஆக்டா எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் பிஎம்டபிள்யூவில் உள்ள 4.4 லிட்டர் மைல்டு ஹைபிரிட் வி8 இன்ஜின் இடம் பெற்றுள்ளது. ரேஞ்ச் ரோவர் கார்களிலும் இதே இன்ஜின்தான் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 626 எச்பி பவரையும் 750 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. 4 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்.
அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். 22 அங்குல அலாய் வீல்கள், 11.4 அங்குல இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே, முன்புற கன்சோலில் ரெப்ரிஜிரேட்டர் வசதி, இசைக்கேற்ப இயங்கும் வைபரேட் மோட்டார்களுடன் கூடிய பாடி அண்ட் சோல் சீட் ஆடியோ தொழில்நுட்பம், 6டி டைனமிக் சஸ்பென்ஷன் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி 63 காருக்கு இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.2.59 கோடி.
The post டிபண்டர் ஆக்டா appeared first on Dinakaran.