டிஜிட்டல் யுகத்தில் மூழ்கி கிடப்பதால் 90% பேரை தாக்கும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்: மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

1 month ago 7

மனித உடலில் ஒவ்ெவாரு உறுப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதில் முக்கியமானது ‘‘கண்கள். கல்வி, கவனம், நம்பிக்கை, அன்பு, பண்பு என்று அனைத்தையும் கண்ணோடு ஒப்பிட்டு கூறுவதே இதற்கான சான்று. கண்கள் மென்மையானவை. ஆனால், மிகவும் சக்திவாய்ந்தவை. அழகு நிறைந்தவை. எனவே உங்கள் கண்களை நட்சத்திரங்கள் மீதும், கால்களை தரையிலும் வைத்திருங்கள்,’’ என்றார் பிரசித்தி பெற்ற கவிஞர் தியோடர் ரூஸ்வெல்ட். இத்தகு பெருமைக்குரிய கண்களை பாதுகாப்பது என்பது நம் அனைவருக்கும் மிகவும் அவசியம். இதுகுறித்த விழிப்புணர்வை இந்த பூமியில் ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 10ம்தேதி உலக பார்வை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக பார்வை தினம் என்பது குருட்டுத்தன்மை மற்றும் பார்வை குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு கவனத்தை ஈர்க்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கண் சார்ந்த பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக தற்போதைய சூழலில் நவீன பயன்பாடுகளால் கண்பார்வை பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிறப்பு கண் மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: மனித வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம், உணவு, ரத்தஅழுத்தம் போன்ற பாதிப்புகளை தவிர்க்க அனைவரும் முடிந்தவரை ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல் நோயை தடுப்பதற்கான ஊசிகளையும் போட்டுக் கொள்கின்றனர். ஆனால், இது போன்று கண்களை பாதுகாப்பதற்கு யாரும் கவனம் செலுத்துவதில்லை என்பதே உண்மை. உடல் ஆரோக்கியம் குறைந்தாலும் தடுமாறாமல் நாம் எழுந்து நடப்பதற்கு தேவையானது நல்ல கண் பார்வை. ஆனால், பெரும்பாலான மக்கள், கண்களுக்கு வரும் பாதிப்புகளை உணர்வதே இல்லை. உலகளவில் 220 கோடி மக்களுக்கு பார்வை குறைபாடுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. ஆண்டு தோறும் 10 கோடி மக்கள் பார்வை குறைபாடுகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக நவீன சாதனங்களால் கண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை தற்போது கையடக்க சாதனங்களை கொண்ேட கழித்து வருகின்றனர். குறிப்பாக டேப்ெலட்டுகள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்புகள், ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பதால் கண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். மிக முக்கியமாக சமீப ஆண்டுகளில் சிவிஎஸ் என்னும் கம்ப்யூட்டர் பார்வை நோய்க்குறி (கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்) அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதித்து வருகிறது.

தற்ேபாதைய டிஜிட்டல் யுகத்தில் 75சதவீதம் பேர், காகிதத்தில் இருந்து கம்ப்யூட்டருக்கு மாறியுள்ளனர். கம்ப்யூட்டர்கள் மட்டுமன்றி செல்போன்கள், இ-ரீடர்கள் மற்றும் பிற விஷூவல் திரைகளுக்குள் அதிகளவில் மாறி வருகின்றனர். இதில் கம்ப்யூட்டரால் ஏற்படும் கண் பிரச்னைகளே கணினி பார்வை நோய்க்குறி என்று அழைக்கப்படுகிறது. இது முழுமையான கண் திரிபு மற்றும் வலியை உள்ளடக்கியது. 50சதவீதம் முதல் 90சதவீதம் கம்ப்யூட்டர் திரைகளில் பணிபுரிவோரை இந்த பாதிப்பு தாக்குகிறது. இதனால் தொடர்ந்து கண் எரிச்சல், கண் சோர்வு, மங்கலான பார்வை போன்ற பிரச்னைகளும் அதிகரித்து வருகிறது. குருட்டுத்தன்மை தடுப்புக்கான சர்வதேச நிறுவனம் (ஐஏபிபி) சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் 1.3கோடி மக்களுக்கு தங்களது வேலை சார்ந்தே பார்வை குறைபாடுகள் ஏற்பட்டு வருகிறது.

இதில் 76சதவீதம் பேர், கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன்களை வைத்து அதிகநேரம் வேலைகளை செய்வோர் என்று தெரிவித்துள்ளது. எனவே பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளை அணிந்து பணியாற்ற வேண்டும்.
தொடர்ந்து கணினி மற்றும் கம்ப்யூட்டரிலேயே மூழ்கி இருக்காமல் 30 நிமிடத்திற்கு ஒரு முறை சற்று ஓய்வெடுக்க வேண்டும். கம்ப்யூட்டர் திரையை கண்மட்டத்திலிருந்து 15முதல் 20டிகிரி கோணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கண்கள் வறண்டு விடாமல் எப்போதும் ஈரமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். சரியான வெளிச்சத்தை பயன்படுத்த வேண்டும். கண் கூசுவது போன்ற நிகழ்வுகளை குறைக்க வேண்டும். இவை அனைத்தும் நவீன யுகத்தில் அதிகரித்து வரும் கண்பாதிப்புகளை ஓரளவு கட்டுப்படுத்தும்.
இவ்வாறு கண்மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

 

The post டிஜிட்டல் யுகத்தில் மூழ்கி கிடப்பதால் 90% பேரை தாக்கும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்: மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article