டிஜிட்டல் கைது மோசடி; ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ.83 லட்சம் பறிப்பு

1 day ago 5

மும்பை,

மராட்டிய மாநிலம் பீட் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, மர்மநபரிடம் இருந்து செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. இதில் எதிர் முனையில் பேசியவர் தன்னை மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.

மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியை பெயரில் பார்சல் ஒன்று வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பதாகவும் கூறினார். இதுகுறித்த விசாரணைக்காக மே 20-ந் தேதி முதல் 30-ந்தேதிவரை 11 நாட்கள் ஆசிரியை டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் அதுவரை வீட்டை, விட்டு எங்கும் செல்லக்கூடாது. சென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என மிரட்டல் விடுத்தார். இதைக்கேட்டு ஓய்வு பெற்ற ஆசிரியை அதிர்ச்சியில் உறைந்தார். பயத்தில் அந்த நபர் கூறியதை எல்லாம் செய்தார். மேலும் வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக அவர் கூறிய வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.83 லட்சம் வரை செலுத்தினார்.

இதனால் அவர் கடைசி கால சேமிப்பு முழுவதும் கரைந்தது. ஆனால் மர்மநபர் ஆசிரியையை விடுவதாக இல்லை, மேலும், மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். அப்போதுதான் ஆசிரியைக்கு இதில் ஏதோ தவறு இருப்பது புலப்பட்டது. எனவே இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

எனவே குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இந்தப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோசடி பேர்வழியை வலைவீசி தேடிவருகின்றனர்.

========================

விறுவிறுப்பாக நடந்து முடிந்த போலந்து நாடாளுமன்ற தேர்தல்

வார்சா, ஜூன்.2-

ஐரோப்பிய நாடான போலந்தில் அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் அங்கு நடைபெற்று வருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி நடந்து முடிந்தது. இதில் தாராளவாத ஐரோப்பிய ஒன்றிய சார்பு வேட்பாளரான ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கியும் (வயது 53), பழமைவாத கட்சி சார்பில் கரோல் நவ்ரோக்கி (42) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறினர்.

இதனையடுத்து 2-வது கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தேர்தல் முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Read Entire Article