டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

4 months ago 27

சென்னை,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5- ஏ (தலைமை செயலக பணி ) உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப்பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது.

இணைய வழி மூலம் தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

தேர்வு விவரங்களை படிக்க: https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==

Read Entire Article