டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: ஆப்சென்ட் ஆனது எத்தனை பேர்?

7 hours ago 2

சென்னை,

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர்-215, இளநிலை உதவியாளர்- 1,678, தட்டச்சர்-1,100, சுருக்கெழுத்து தட்டச்சர்-368, இளநிலை வருவாய் இன்ஸ்பெக்டர்- 239, வனக்காப்பாளர்- 145, வனக்காவலர்-112 உள்ளிட்ட குரூப்-4 பணிகளில் 3,935 காலியிடங்கள் இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பை வெளியிட்டது.

இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான 5,26,553 ஆண்கள், 8,63,068 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 13,89,738 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, குரூப்-4 பணி இடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 314 மையங்கள் வாயிலாக 4,922 தேர்வு அறைகளில் நடந்தது. சென்னையில் மட்டும் 311 இடங்களில் நடைபெற்றது.

தேர்வை எழுத 13,89,738 பேர் எழுத விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 2,41,719 பேர் தேர்வை எழுதவில்லை. ஆக 11,48,019 பேர் (82.61 சதவீதம்) தேர்வை ஆர்வமுடன் எழுதி இருக்கிறார்கள். இதன் மூலம் காலியாக உள்ள 3,935 இடங்களுக்கு 11,48,019 பேர் போட்டியிடுகிறார்கள். அதாவது ஒரு இடத்துக்கு 292 பேர் போட்டியிடுகிறார்கள்.

Read Entire Article