
திண்டுக்கல்,
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது லீக் போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதன் 26-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றபின் டாஸ் போடப்பட்டு, போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.