
மும்பை,
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9230 ரன்கள் அடித்துள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7-ம் தேதி ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் தற்போது விராட் கோலியும் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த வருடம் டி20 உலகக்கோப்பையை வென்ற உடனே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து இருவரும் ஓய்வு பெற்றனர்.
இவர்களில் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி முதலில் ஓய்வு அறிவித்த நிலையில் சில மணி நேரங்களிலேயே ரோகித்தும் விடைபெற்றார். அதேவேளை டெஸ்ட் போட்டிகளில் ரோகித் முதலில் ஓய்வை அறிவித்த நிலையில் விராட் சில தினங்கள் கழித்து இன்று அறிவித்துள்ளார். இந்த சுவாரசிய நிகழ்வு ரோகித் - விராட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.