டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

2 weeks ago 5

லாகூர்,

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.இதனால் ஷாஹீன் அப்ரிடி டி20, ஒருநாள் பாகிஸ்தான் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.ஷான் மசூத் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் , டி20 உலகக்கோப்பையை முன்னிட்டு மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார். சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால் பாபர் அசாம் கேப்டன்ஷிப் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து மீண்டும் டி20, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் விலகினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சல்மான் அலி ஆகா நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருடன் ஆரம்பமாக உள்ளது.

JUST IN: Pakistan name their new leader to succeed Babar Azam as white-ball captain Read on https://t.co/Aqp27MTNoo

— ICC (@ICC) October 27, 2024
Read Entire Article