
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 68-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளாசென் 105 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையும் சேர்த்து சுனில் நரைன் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 210 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. சுனில் நரைன் - 210 விக்கெட்டுகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2. சமித் படேல் - 208 விக்கெட்டுகள் - நாட்டிங்ஹாம்ஷயர்
3. கிறிஸ் வுட் - 199 விக்கெட்டுகள் - ஹாம்ப்ஷயர்
4. லசித் மலிங்கா - 195 விக்கெட்டுகள் - மும்பை இந்தியன்ஸ்
5. டேவிட் பெய்ன் - 193 விக்கெட்டுகள் - குளூசெஸ்டர்ஷையர்
பின்னர் 279 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஐதராபாத் 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.