
மவுண்ட் மவுங்கானுய்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் பின் ஆலென் 50 ரன் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியினர், நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் பாகிஸ்தான் 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 115 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அப்துல் சமத் 44 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டப்பி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி வரும் 26ம் தேதி வெல்லிங்டனில் நடைபெறுகிறது.