டி20 கிரிக்கெட்; இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

2 weeks ago 6

செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீடில் இன்று நடக்கிறது. ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும்.

அதேவேளையில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து, அதே வெற்றிப்பயணத்தை டி20 தொடரில் தொடர முனைப்பு காட்டும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.

Read Entire Article