டி.டி.எப்.வாசன் மீது எத்தனை வழக்குகள் உள்ளன?- போலீசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

4 hours ago 1

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் யூடியூபர் டி.டி.எப்.வாசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''எனக்கு பாஸ்போர்ட் கேட்டு கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு விண்ணப்பம் செய்தேன்.

இதற்கிடையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில், நான் ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்துக்கு உள்ளானது. இதுகுறித்து என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என் ஓட்டுநர் உரிமமும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், என்னுடைய பாஸ்போர்ட் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் உள்ளது. நான் தற்போது சினிமாவில் நடிப்பதால், வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள வேண்டியதுள்ளது. அதனால், என் விண்ணப்பத்தை பரிசீலித்து, பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், மனுதாரர் வாசன் மீது மோட்டார் வாகன விபத்து தொடர்பாகவும், அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதாகவும் பல வழக்குகள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் நிலுவையில் உள்ளன.

இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் மீது இதுவரை எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்பது குறித்து விரிவான அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை ஜூன் 2-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.

Read Entire Article