டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு

11 hours ago 3

திண்டுக்கல்,

9வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் நேற்று இரவு நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வி கண்ட சேப்பாக் அணி 2வது தகுதி சுற்றுக்கு சென்றுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நடக்க உள்ளது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறும். தோல்வி காணும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Read Entire Article