டி.என்.பி.எல்.: கோவை கிங்ஸ் - திருப்பூர் அணிகள் இன்று மோதல்

1 week ago 2

நெல்லை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் திருப்பூர் அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வி கண்டு 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் கோவை அணி 5 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 4 தோல்வி கண்டு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. 

Read Entire Article