டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 'திரில்' வெற்றி

1 week ago 2

நெல்லை,

டி.என்.பி.எல். தொடரில் நெல்லையில் இன்று நடைபெற்று வரும் 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஆஷிக் 5 ரன்களிலும், மொகித் ஹரிகரன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் பாபா அபராஜித் - விஜய் சங்கர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இவர்களில் பாபா அபராஜித் 63 ரன்களிலும், விஜய் சங்கர் 59 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் அடித்தது.

இதனையடுத்து 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி திருச்சி அணி விளையாடியது. தொடக்க ஆட்டகாரர்களாக வசீம் அகமது மற்றும் ஜெயராமன் சுரேஷ்குமார் களமிறங்கினர். நிதானமான ஆடிய வசீம் அகமது 10 ரன்களிலும், ஜெயராமன் சுரேஷ்குமார் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜெகதீசன் கவுசிக் 43 ரன்களிலும், ஜாபர் ஜமால் 6 ரன்களிலும், ராஜ்குமார் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து இறங்கிய சஞ்சய் யாதவ், முகிலேஷ் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் திருச்சி அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.

இறுதியில், திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் அணி 6-வது வெற்றியை பதிவு செய்தது. சேப்பாக் அணி சார்பில் அதிகபட்சமாக பிரேம் குமார் 3 விக்கெட்டுகளையும், விஜய் சங்கர், ரோகித் சுதர், சிலம்பரசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Read Entire Article