செங்குன்றம் – சோத்துப்பாக்கம் இடையே ரூ.20 கோடியில் சாலை சீரமைத்து மழைநீர் கால்வாய் அமைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

7 hours ago 2

புழல்: செங்குன்றம் – சோத்துப்பாக்கம் இடையே குண்டும், குழியுமான சாலையை ரூ.20 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து, புதிதாக மழைநீர் கால்வாய் அமைத்துக்கொடுத்த மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ந்திப்பிலிருந்து செல்லும் செங்குன்றம் – சோத்துப்பாக்கம் மாநில நெடுஞ்சாலை செங்குன்றம் சுடுகாடு, தீயணைப்பு நிலையம், தீர்த்தங்கரையும் பட்டு, பாலவாயல், குமரன் நகர் வரை சுமார் 2.4 கிமீ தூரம் உள்ள மாநில நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இந்த, சேதமடைந்த சாலையில், லேசான மழை பெய்தால் கூட ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கும். இதனால், இச்சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பைக்குகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பல நேரங்களில் குண்டும், குழியுமான சாலைகளில் கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து தீர்த்தங்கரையம்பட்டு கிராம சமூக ஆர்வலர்கள், செங்குன்றம் – சோத்துப்பாக்கம் சாலையை சீரமைக்கவும், நெடுஞ்சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்தநிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பணி முடிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு சில இடங்களில் மட்டும் மழைநீர் கால்வாய் பணி முடிக்கப்படாமல் உள்ளது. சாலைகள் முழுமையாக முடிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தமிழக மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.  மேலும், ஒருசில இடங்களில் முடிக்கப்படாமல் உள்ள மழைநீர் கால்வாய்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்குன்றம் – சோத்துப்பாக்கம் இடையே ரூ.20 கோடியில் சாலை சீரமைத்து மழைநீர் கால்வாய் அமைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article